Ativaiyer Kazhagam 2nd year Celebration

Celebrating Our 2nd Anniversary – A Joyous Milestone at Stovner Velhus

On June 1st, 2025, we joyfully celebrated the 2nd Anniversary of our Women’s Club at Stovner Velhus, marking yet another milestone in our journey of empowerment, community, and culture.

The celebration was filled with vibrant activities, where our talented women showcased their skills and passions. The evening began with the beautiful Inniyam, a traditional Tamil dance and song performance that set a graceful and festive tone for the event.

We continued with a variety of engaging programs:

  • Villu Pattu – a captivating storytelling tradition expressed through song and a unique bow-shaped instrument

  • Kolattam – an energetic and colorful Tamil folk dance performed with rhythmic stick clapping

  • Debates on important social topics that sparked meaningful dialogue

  • Songs and dance performances that brought joy and enthusiasm to the entire hall

The atmosphere was lively, warm, and inclusive. Delicious snacks and a hearty dinner were served to all our guests, and the food was thoroughly enjoyed by everyone.

We were thrilled to see the participation of more than 60 women, all of whom left the venue feeling inspired, uplifted, and re-energized. Their smiles and positive energy were a true reflection of the spirit of our club.

This celebration not only honored our past achievements but also strengthened our commitment to continue spreading joy, empowerment, and togetherness to more women in the future.

Together, we rise – and this is just the beginning!

எங்கள் மகளிர் குழுவின் 2வது ஆண்டு விழா – ஸ்டோவ்னர் வெல்ஹஸில் மகிழ்ச்சிகரமான நிகழ்வு

01.06.2025 அன்று, எங்கள் மகளிர் குழுவின் 2வது ஆண்டு விழா ஸ்டோவ்னர் வெல்ஹஸில் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இது எங்கள் சமூகத்தின் ஒருமைப்பாடு, ஊக்கம் மற்றும் கலாசாரத்தின் வெளிப்பாடாகும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது.

இந்த விழாவில், பல்வேறு பயனுள்ள செயல்பாடுகள் இடம்பெற்று, பெண்கள் தங்களின் திறமைகளை காட்சிப்படுத்தினர்.
இந்நியம் என்ற தமிழின் பாரம்பரிய பாடலும் நடனமும் நிகழ்ச்சிக்கு ஒரு அழகான தொடக்கத்தை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளில்:

  • வில்லுப்பாட்டுபாட்டிலும் வில்லினாலான இசையிலும் கதைகளை சொல்வதன் மூலம் பாரம்பரிய கலை

  • கோலாட்டம்கைகளைச் சாட்டிச் சாட்டி மேற்கொள்ளப்படும் சுறுசுறுப்பான தமிழ் நாட்டுப்புற நடனம்

  • சமூகக் கருத்துக்கள் தொடர்பான விவாதங்கள்

  • பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள்

எல்லா நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின.
விருந்தினர்கள் அனைவருக்கும் சிறந்த சிற்றுண்டி மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. உணவின் சுவையை அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன், புத்துணர்ச்சியுடன் மற்றும் ஊக்கத்துடன் வீடு திரும்பினர்.இந்த நிகழ்வு, எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான படியாக அமைய, எதிர்காலத்தில் மேலும் பல பெண்களுக்கு நல்ல எண்ணங்கள், உற்சாகம் மற்றும் சகோதரப்பிணைப்பு பரப்ப எங்கள் முயற்சி தொடரும்.

இணைந்து நம்மால் முடியும் – இது ஆரம்பம் தான்!